Breaking News
Home / இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

ஏக்கருக்கு ரூ.2,50,000… உலர் முருங்கை இலையில் உன்னத வருமானம்! – பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி!

காய்கறிச் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை, விலை வீழ்ச்சிதான். சந்தையில் வரத்து அதிகமானால் திடீரென விலை அதலபாதாளத்துக்குப் போய்விடும். அதே நேரத்தில், சில நேரங்களில், எதிர்பார்க்காத அளவுக்கு அதிக விலையும் கிடைக்கும். இப்பிரச்னை முருங்கைக்காய் விவசாயிகளுக்கும் அடிக்கடி ஏற்படும். இந்த விலைப் பிரச்னையிலிருந்து தப்பிக்க நினைக்கும் பல விவசாயிகள், முருங்கை விதை விற்பனை, முருங்கை இலை விற்பனை… என இறங்கி நிலையான வருமானம் ஈட்டி வருகிறார்கள். சில விவசாயிகள் …

Read More »

ஏக்கருக்கு ₹ 50 ஆயிரம் வருமானத்தோடு மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம்!

பல ஆண்டுகளாக ரசாயன உரம் பயன்படுத்தி விவசாயம் செய்த நிலத்தை, இயற்கை விவசாயத்துக்கு மாற்ற பலதானிய விதைப்பு, பசுந்தாள் உரச்செடிகள் விதைப்பு எனப் பல முறைகளைக் கையாண்டு வருகிறார்கள் விவசாயிகள். ஆனால், மக்காச்சோளம் விதைத்து அறுபதே நாள்களில் மண்ணை வளப்படுத்தியதோடு, நல்ல விளைச்சலும் பார்த்திருக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி பிரதாபன். கடந்த 10.12.2015-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில், ‘மணக்கும் ஜீரோ பட்ஜெட் ரோஜா’ என்ற …

Read More »

ஜீராபூல்… மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய நெல் ரகம்!

நமது மாநிலத்துக்கென பிரத்யேக பாரம்பர்ய நெல் ரகங்கள் இருப்பதுபோலவே, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மண் வளம், தட்ப வெப்ப நிலை ஆகிய அம்சங்களைப் பொறுத்து சில பாரம்பர்ய ரகங்கள் இருக்கின்றன. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கெனப் பாரம்பர்ய நெல் ரகங்கள் உண்டு. அவற்றில் பல ரகங்கள் அழிந்துவிட்ட நிலையில், சில ரகங்கள் மட்டும் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘ஜீராபூல்’  என்ற பாரம்பர்ய ரக நெல். ‘ஜீரா’ என்றால் சீரகம், …

Read More »

மரம் செய விரும்பு! – 10 – விஷத்தை முறிக்கும் எட்டி!

எல்லா மரங்களும் மனிதர்களுக்கு நன்மைதான் செய்கின்றன. அவற்றில் தீயது என எதுவுமேயில்லை. ஆனாலும், சில மரங்களை நாம் பயன்பாட்டிலிருந்து தள்ளியே வைக்கிறோம். அப்படிப்பட்ட மரங்களில் முக்கியமானது எட்டி மரம். ‘எட்டி காய்த்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன’ என்பது  பழமொழி. தமிழ்மொழியின் சிறப்பைப் பாருங்கள். பெயரிலேயே அதன் செயலை விளக்கும் விதமாக, மனிதர்களிடமிருந்து எட்டியேயிருக்க  வேண்டும் என்பதற்காகவே இந்த மரத்துக்கு ‘எட்டி’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த மரத்தின் காய்கள் கொடிய விஷமுடையவை. …

Read More »

உன்னத வருமானம் கொடுக்கும் ஊடுபயிர் கத்திரி

இயற்கை விவசாயிகள் யாராவது அழைத்தால், கூடுமானவரை தவிர்க்காமல் அவர்களது தோட்டத்துக்குச் சென்று கால் பதித்து வருவார், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். ஆனால், இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும், ஒற்றைப்பயிர் சாகுபடி நடக்கும் தோட்டத்துக்குக் கண்டிப்பாகச் செல்லமாட்டார். தென்னை, வாழை, காய்கறிகள் என எந்தச் சாகுபடியாக இருந்தாலும், கலப்புப் பயிர்கள் அல்லது ஊடுபயிர்கள் சாகுபடி கட்டாயம் இருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் நம்மாழ்வார். அதனால்தான், பெரும்பாலான இயற்கை …

Read More »

நஞ்சில்லா உணவு… நோயில்லா வாழ்க்கை… மாடித்தோட்டத்தின் மகத்துவம்!

இயற்கை உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது என்பதற்கு நேரடிச் சாட்சி, நகரங்களில் பெருகி வரும் வீட்டுத்தோட்டங்கள்தான். தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகளவில் மாடித்தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்பு உணர்வு பெருகி வருவதில் ‘பசுமை விகடன்’ இதழுக்கும் முக்கியப் பங்குண்டு. மாடித்தோட்டம் அமைக்கும் விதம் குறித்துச் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கிறது, பசுமை விகடன். அதோடு, மாடித்தோட்டம் அமைத்துள்ளவர்களின் …

Read More »

3 ஏக்கர்… 100 நாள்கள்… ரூ 2 லட்சம் லாபம்! – பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை

பொதுவாக, வேளாண்மைத்துறை நடத்தும் பயிர் விளைச்சல் போட்டிகளில் ரசாயன விவசாயிகள்தான் கலந்துகொண்டு பரிசுகளைப் பெறுவார்கள். ஆனால், இயற்கை முறையில் நிலக்கடலை விளைவித்துப் பயிர் விளைச்சல் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றிருக்கிறார்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், ஐயப்பன் இருவரும். ஆய்வுக் குழு நடத்திய சோதனையின்போது, ஹெக்டேருக்கு 10,168 கிலோ ஈர நிலையிலான நிலக்கடலையை மகசூல் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. நான்கு நாள்கள் காய்ந்த நிலையில், ஏக்கருக்கு 1,840 கிலோ காய்ந்த …

Read More »

வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி…

*150 நாள் வயது *எல்லா மண்ணுக்கும் ஏற்றது *ஆடிப்பட்டம், மாசிப்பட்டம் சிறந்தது *ஏக்கருக்கு 30 கிலோ விதை *அரிசியாக விற்றால் கூடுதல் லாபம் நஞ்சில்லா உணவு உற்பத்தி என்பதோடு எளிமையான பராமரிப்பு மற்றும் குறைவான செலவில் நிறைவான லாபம் என்பதுதான் இயற்கை விவசாயத்தை நோக்கி பலரையும் திருப்பி வருகிறது. இதில் வீரிய ரக பயிர்களையும் சிறப்பாக சாகுபடி செய்யமுடியும் என்றாலும், பெரும்பாலான இயற்கை விவசாயிகள் பாரம்பர்ய ரகங்களைத்தான் சாகுபடி செய்கிறார்கள். …

Read More »

மானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து!

ஆடிப்பட்டத்துக்கு ஏற்றது *விதைக்காக விற்பதில் கூடுதல் லாபம் *ஏக்கருக்கு 6 கிலோ விதை *70 நாட்களில் பாசிப்பயறு அறுவடை *90 நாட்களில் உளுந்து அறுவடை காய்கறிகள், மரப்பயிர்கள், பழப்பயிர்கள்… என அனைத்துப் பயிர்களையும் நடவுசெய்வதற்கு ஏற்ற பட்டமாக ஆடிப்பட்டம் இருந்தாலும், குறிப்பாக சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளுக்கு இது மிகச்சிறந்த பட்டமாக இருக்கிறது. பெரும்பாலான மானாவாரி விவசாயிகள் இப்பட்டத்தில்தான் விதைப்பைத் தொடங்குகிறார்கள். அந்தவகையில், ஆடிப்பட்டத்தில் தொடர்ந்து, பயறு வகைகளை இயற்கை …

Read More »

நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்… வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!

ஆங்கிலேயர் காலத்தில்,  இந்திய பருத்தி விவசாயிகளுக்கு ஆரம்பித்த சோதனை இன்றளவும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நஷ்டமில்லாமல் பாரம்பர்ய முறையில் நாட்டுப்பருத்தி சாகுபடி செய்து கொண்டிருந்த விவசாயிகளை வீரிய விதைகள், பசுமைப்புரட்சி, மரபணு மாற்று விதைகள் என மாற்றியதன் விளைவு… பருத்தி விவசாயிகளின் கொத்துக்கொத்தான மரணம்தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பாவில் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோய்க் கொண்டிருக்கும் விஷயத்தை அவ்வளவு எளிதாக யாரும் கடந்து போய்விட முடியாது. இதேபோல …

Read More »