Breaking News

வறட்சியிலும் செழித்த பாரம்பர்ய சோளம்!

மானாவாரி வேளாண்மை செய்யும் பெரும்பாலான விவசாயிகள் தேர்வு செய்யும் பயிர், சிறுதானியங்கள்தான். அவைதான் வறட்சியைத் தாக்குப்பிடித்து வளரக்கூடியவையாக இருக்கின்றன. அந்த வகையில், பாரம்பர்ய ரகமான ‘மாப்பிள்ளை மினுக்கி’ என்ற சோளத்தைச் சாகுபடி செய்து கடுமையான வறட்சியிலும் கணிசமான மகசூலை எடுத்திருக்கிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி அய்யனார். விருதுநகர்-சிவகாசி சாலையில் 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, காரிசேரி எனும் கிராமம். இங்குதான் அய்யனாரின் நிலம் இருக்கிறது. தோட்டத்தில் வேலை செய்து …

Read More »

வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி…

*150 நாள் வயது *எல்லா மண்ணுக்கும் ஏற்றது *ஆடிப்பட்டம், மாசிப்பட்டம் சிறந்தது *ஏக்கருக்கு 30 கிலோ விதை *அரிசியாக விற்றால் கூடுதல் லாபம் நஞ்சில்லா உணவு உற்பத்தி என்பதோடு எளிமையான பராமரிப்பு மற்றும் குறைவான செலவில் நிறைவான லாபம் என்பதுதான் இயற்கை விவசாயத்தை நோக்கி பலரையும் திருப்பி வருகிறது. இதில் வீரிய ரக பயிர்களையும் சிறப்பாக சாகுபடி செய்யமுடியும் என்றாலும், பெரும்பாலான இயற்கை விவசாயிகள் பாரம்பர்ய ரகங்களைத்தான் சாகுபடி செய்கிறார்கள். …

Read More »

மானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து!

ஆடிப்பட்டத்துக்கு ஏற்றது *விதைக்காக விற்பதில் கூடுதல் லாபம் *ஏக்கருக்கு 6 கிலோ விதை *70 நாட்களில் பாசிப்பயறு அறுவடை *90 நாட்களில் உளுந்து அறுவடை காய்கறிகள், மரப்பயிர்கள், பழப்பயிர்கள்… என அனைத்துப் பயிர்களையும் நடவுசெய்வதற்கு ஏற்ற பட்டமாக ஆடிப்பட்டம் இருந்தாலும், குறிப்பாக சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளுக்கு இது மிகச்சிறந்த பட்டமாக இருக்கிறது. பெரும்பாலான மானாவாரி விவசாயிகள் இப்பட்டத்தில்தான் விதைப்பைத் தொடங்குகிறார்கள். அந்தவகையில், ஆடிப்பட்டத்தில் தொடர்ந்து, பயறு வகைகளை இயற்கை …

Read More »

நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்… வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!

ஆங்கிலேயர் காலத்தில்,  இந்திய பருத்தி விவசாயிகளுக்கு ஆரம்பித்த சோதனை இன்றளவும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நஷ்டமில்லாமல் பாரம்பர்ய முறையில் நாட்டுப்பருத்தி சாகுபடி செய்து கொண்டிருந்த விவசாயிகளை வீரிய விதைகள், பசுமைப்புரட்சி, மரபணு மாற்று விதைகள் என மாற்றியதன் விளைவு… பருத்தி விவசாயிகளின் கொத்துக்கொத்தான மரணம்தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பாவில் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோய்க் கொண்டிருக்கும் விஷயத்தை அவ்வளவு எளிதாக யாரும் கடந்து போய்விட முடியாது. இதேபோல …

Read More »

10 ஏக்கர்… ஆண்டுக்கு ரூ 30 லட்சம் வருமானம்! – கொட்டிக் கொடுக்கும் கொய்யா

தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கலாம் என உலகமே அலறிக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்குத் தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பருவமழை பொய்த்துப் போனதோடு, நிலத்தடி நீர்மட்டமும் அதள பாதாளத்துக்குப் போய்விட்டது. இத்தனை இன்னல்களுக்கு இடையில்தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால், இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். எதிர்காலத்தை மனதில்வைத்து, அதிகத் தண்ணீர் தேவைப்படாத பயிர்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்தால் மட்டுமே, …

Read More »