Breaking News
Home / Tag Archives: இயற்கை விவசாயம்

Tag Archives: இயற்கை விவசாயம்

ஏக்கருக்கு ₹ 50 ஆயிரம் வருமானத்தோடு மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம்!

பல ஆண்டுகளாக ரசாயன உரம் பயன்படுத்தி விவசாயம் செய்த நிலத்தை, இயற்கை விவசாயத்துக்கு மாற்ற பலதானிய விதைப்பு, பசுந்தாள் உரச்செடிகள் விதைப்பு எனப் பல முறைகளைக் கையாண்டு வருகிறார்கள் விவசாயிகள். ஆனால், மக்காச்சோளம் விதைத்து அறுபதே நாள்களில் மண்ணை வளப்படுத்தியதோடு, நல்ல விளைச்சலும் பார்த்திருக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி பிரதாபன். கடந்த 10.12.2015-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில், ‘மணக்கும் ஜீரோ பட்ஜெட் ரோஜா’ என்ற …

Read More »

ஜீராபூல்… மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய நெல் ரகம்!

நமது மாநிலத்துக்கென பிரத்யேக பாரம்பர்ய நெல் ரகங்கள் இருப்பதுபோலவே, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மண் வளம், தட்ப வெப்ப நிலை ஆகிய அம்சங்களைப் பொறுத்து சில பாரம்பர்ய ரகங்கள் இருக்கின்றன. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கெனப் பாரம்பர்ய நெல் ரகங்கள் உண்டு. அவற்றில் பல ரகங்கள் அழிந்துவிட்ட நிலையில், சில ரகங்கள் மட்டும் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘ஜீராபூல்’  என்ற பாரம்பர்ய ரக நெல். ‘ஜீரா’ என்றால் சீரகம், …

Read More »

மரம் செய விரும்பு! – 10 – விஷத்தை முறிக்கும் எட்டி!

எல்லா மரங்களும் மனிதர்களுக்கு நன்மைதான் செய்கின்றன. அவற்றில் தீயது என எதுவுமேயில்லை. ஆனாலும், சில மரங்களை நாம் பயன்பாட்டிலிருந்து தள்ளியே வைக்கிறோம். அப்படிப்பட்ட மரங்களில் முக்கியமானது எட்டி மரம். ‘எட்டி காய்த்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன’ என்பது  பழமொழி. தமிழ்மொழியின் சிறப்பைப் பாருங்கள். பெயரிலேயே அதன் செயலை விளக்கும் விதமாக, மனிதர்களிடமிருந்து எட்டியேயிருக்க  வேண்டும் என்பதற்காகவே இந்த மரத்துக்கு ‘எட்டி’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த மரத்தின் காய்கள் கொடிய விஷமுடையவை. …

Read More »

உன்னத வருமானம் கொடுக்கும் ஊடுபயிர் கத்திரி

இயற்கை விவசாயிகள் யாராவது அழைத்தால், கூடுமானவரை தவிர்க்காமல் அவர்களது தோட்டத்துக்குச் சென்று கால் பதித்து வருவார், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். ஆனால், இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும், ஒற்றைப்பயிர் சாகுபடி நடக்கும் தோட்டத்துக்குக் கண்டிப்பாகச் செல்லமாட்டார். தென்னை, வாழை, காய்கறிகள் என எந்தச் சாகுபடியாக இருந்தாலும், கலப்புப் பயிர்கள் அல்லது ஊடுபயிர்கள் சாகுபடி கட்டாயம் இருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் நம்மாழ்வார். அதனால்தான், பெரும்பாலான இயற்கை …

Read More »

3 ஏக்கர்… 100 நாள்கள்… ரூ 2 லட்சம் லாபம்! – பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை

பொதுவாக, வேளாண்மைத்துறை நடத்தும் பயிர் விளைச்சல் போட்டிகளில் ரசாயன விவசாயிகள்தான் கலந்துகொண்டு பரிசுகளைப் பெறுவார்கள். ஆனால், இயற்கை முறையில் நிலக்கடலை விளைவித்துப் பயிர் விளைச்சல் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றிருக்கிறார்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், ஐயப்பன் இருவரும். ஆய்வுக் குழு நடத்திய சோதனையின்போது, ஹெக்டேருக்கு 10,168 கிலோ ஈர நிலையிலான நிலக்கடலையை மகசூல் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. நான்கு நாள்கள் காய்ந்த நிலையில், ஏக்கருக்கு 1,840 கிலோ காய்ந்த …

Read More »

வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி…

*150 நாள் வயது *எல்லா மண்ணுக்கும் ஏற்றது *ஆடிப்பட்டம், மாசிப்பட்டம் சிறந்தது *ஏக்கருக்கு 30 கிலோ விதை *அரிசியாக விற்றால் கூடுதல் லாபம் நஞ்சில்லா உணவு உற்பத்தி என்பதோடு எளிமையான பராமரிப்பு மற்றும் குறைவான செலவில் நிறைவான லாபம் என்பதுதான் இயற்கை விவசாயத்தை நோக்கி பலரையும் திருப்பி வருகிறது. இதில் வீரிய ரக பயிர்களையும் சிறப்பாக சாகுபடி செய்யமுடியும் என்றாலும், பெரும்பாலான இயற்கை விவசாயிகள் பாரம்பர்ய ரகங்களைத்தான் சாகுபடி செய்கிறார்கள். …

Read More »

நாட்டுப் பருத்தியில் நல்ல லாபம்… வறட்சியிலும் செழிக்கும் விளைச்சல்!

ஆங்கிலேயர் காலத்தில்,  இந்திய பருத்தி விவசாயிகளுக்கு ஆரம்பித்த சோதனை இன்றளவும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நஷ்டமில்லாமல் பாரம்பர்ய முறையில் நாட்டுப்பருத்தி சாகுபடி செய்து கொண்டிருந்த விவசாயிகளை வீரிய விதைகள், பசுமைப்புரட்சி, மரபணு மாற்று விதைகள் என மாற்றியதன் விளைவு… பருத்தி விவசாயிகளின் கொத்துக்கொத்தான மரணம்தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பாவில் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோய்க் கொண்டிருக்கும் விஷயத்தை அவ்வளவு எளிதாக யாரும் கடந்து போய்விட முடியாது. இதேபோல …

Read More »

10 ஏக்கர்… ஆண்டுக்கு ரூ 30 லட்சம் வருமானம்! – கொட்டிக் கொடுக்கும் கொய்யா

தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கலாம் என உலகமே அலறிக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்குத் தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பருவமழை பொய்த்துப் போனதோடு, நிலத்தடி நீர்மட்டமும் அதள பாதாளத்துக்குப் போய்விட்டது. இத்தனை இன்னல்களுக்கு இடையில்தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால், இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். எதிர்காலத்தை மனதில்வைத்து, அதிகத் தண்ணீர் தேவைப்படாத பயிர்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்தால் மட்டுமே, …

Read More »